Tuesday, May 11, 2010

அகதி

இதோ இன்று தான் பிறந்தேன்
பிறந்த எனக்கு பால் கூட கிடைக்கவில்லை
அதற்குள் பெயர் கிடைத்துவிட்டது அகதி என்று

அனாதையாக பிறந்தால் கூட
நாடென்று ஒன்று உண்டு
நானோ அகதியாக பிறந்துவிட்டேன்
சொந்தமாக நாட்டிற்கு கூட நாதியற்று போய்விட்டேன்

அகம் புறம் பிரித்து கூறிய தமிழர் பரம்பரை
இன்று அகதியாய் அடைக்கபட்டேன்
அகம் புறம் அனைத்தும் ஒன்றே எனக்கு
அங்கே என் தன்மானம் தணிக்கை செய்யபட்டது
என் சுயமரியாதைக்கு சூடு வைத்தனர்

இதிகாசம் தமிழனை அரக்கன் என்றது
இன்று உலகம் எங்களை அகதி என்று சொல்கிறது
நாளை எமக்கு என்ன பெயரோ

As per some of my friends request, here is the transliteration

Agathi

Idho Indruthan pirandhen
Pirandha enakku paal kuda kidaikkavillai
Adharkul peyar kidaithuvittathu Agathi endru

Anadhaiyaga pirandhal kuda
Naadendru ondr undu
Naano agathiyaga pirandhu vitten
sondhamaga naatirku kuda naathiatru poivitten

Agam puram pirithu kooriya tamizhar parambarai
Indru agathiyai adaikkapatten
Agam puram anaithum ondre enakku
Ange en thanmaanam thanikkai seiyyapattadhu
En suiyamariyadhaikku soodu vaithanar

Idhigasam tamizhanai arakkan endrathu
Indru ulagam engalai agathi endru solkirathu
Naalai emakkana peiyar ennavo

0 Comments:

Post a Comment

<< Home