Friday, October 12, 2007

ஒரு நண்பனின் பிரிவில்

தொலைதூர இரயிலில் பழகி பழகி
ப்ளாட்பார்மில் கால் வைத்ததும்
மறைந்து போகும் மனிதர்களுக்கு மத்தியில்
இரயிலை வருத்தத்துடன் சுமந்து திரிபவனாய் தானிருப்பேன்
இனி எல்லா பயணங்களிலும்

விரைந்து செல்லும் உன் பயணம்
உன் கனவுகளை நனவாக்கும்
பனிமூட்டம் நிறைந்த இந்நகரைப்போல
என் மனதை ஈரமாக்கியிருந்தாய் இதுவரையில்
இன்று என் கண்களை ஈரமாக்கிவிட்டுச் செல்கிறாய்

தனியாய் சென்ற என் பயணம்
உன் வருகையால் துணை ஒன்றை பெற்றது
இன்றோ மீண்டும் என்னை
தனித்தீவில் இறக்கி விட்டுச் சென்று விட்டாய்

இனிய நினைவுகள் என் வாழ்வில்
மேலும் ஒரு பொக்கிஷம்
வாழ்ந்த நினைவுகள் வளர்ந்து திரும்பும் பேரன்பில்
நம்மை திக்குமுக்காடச் செய்யும்
சந்திப்புகளுக்கு பொக்கே கொடுத்து காத்திருப்போம்

Oru nanbanin pirivil

Tholaidhoora railil pazhagi pazhagi
Platformil kaal vaithadhum
maraindhu pogum manidhargalukku mathiyil
railyai varuthathudan sumandhu thiribhavanai than iruppen
ini ella payanagalilum

viraindhu sellum un payanam
un kanavugalai nanavakkum
panimoottam niraindha indha nagarai pol
en manadhai eeramakki irundhai idhu varai
indru en kangalai eera maakki vittu selgirai

Thaniyai sendra en payanam
un varugaiyal thunai ondru petrathu
Indro meedum ennai
thani theevil irakki vittu selgirai

Iniya ninaivugal en vaazhvil
melum oru pokkisham
Vaazhndha ninaivugal valardhu thirumbum peranbil
nammai thikkumukkada seiyum
sandhippugalukku bouque koduthu kaathiruppom

Labels: , ,

0 Comments:

Post a Comment

<< Home